ஏன்!..ஏன்...ஏன்....
புழக்கம் (அறிமுகம்) ஆகும் இன்ப
மழலைப் பருவம் ஏன்
நிழலாக நிலைக்காது மறைகிறதே!
மழலைத் தோட்டமும் தானாக
மறையுமொரு சோகத் தீயோ!
மழவு எனும் இளமை
குமிழுகிறது ஆனந்தமாக!...பின்னும்
குழகுதலாகிறது (கொஞ்சி விளையாடுதல்) இரு பருவமும்
00
கழலுதலாகிறது இளமையும் ஏன்!
குழகமான (அழகு) வாலிப நிலை
கிழத்தனம் ஆவது ஏன்!
கிழமை (முதுமை) ஏன் வருகிறது!
மழவு (இளமை)பின்னோக்கி பயணிக்காதா!
சுழலும் சீவிதம் ஏன்!
உழலும் சோகம் ஏன்!
முழவு (மத்தளம்) ஆவதேன் வாழ்வு!
00
கழலாத கற்பாறைப் பாதையால்
சுழலும் வாழ்வை அலங்கரி!
பவளப்படுகை வாழ்வில் சிப்பிக்குள் முத்தாகு!
நிலாச்சுடர் - வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 29-9-2024
Verona Sharmila
பதிலளிநீக்குஅழகு ❤❤❤
26-3-2025
Leela Nagamani
GIF
clapping hands26-3-25
Ponnambalam Ramanathan
flower