நாற்பெருங்குழுமம் - கிராமியக் கவிதை....
00
'செங்காற்றில் அசைந்தாடும் செம்பருத்திப் பூவே'
00
செங்காற்றில் அசைந்தாடும் செம்பருத்திப் பூவே செங்கல்வராயனுக்குச் சமர்ப்பிக்க செந்தளிப்பாயுனைக் கிள்ளுகிறேன்.
செம்புலமாம் நாட்டில் செங்கோல் தருவாயா!
செந்தில்வேலா! செவிப்படுதலாம் செய்திகள் இன்பமாயில்லையே!
செய்வினையாம் சுடுகலன்களால் செலவாகிறது மன்னுயிர்கள்
செவ்வழி காட்டுவாயா! செவ்விய வேண்டுதலுக்கு அருள்வாயா!
00
செவ்வந்தி உன்னைச் சேர்த்து எடுப்பாள்
பவ்வியமாய் உன்னைச் சுடுநீரில் போடுவாள்.
திவ்வியமான உனது செந்நீரின் சுகாதாரம்
அவ்வளவு சுகம் தரும் அறிவோமே!
அதிகாலையில் நீ மலரமுன்னே சிலர்
அவசரமாகத் திருடுவது மிக கவலை தருகிறதே!
00
கவிக்கனல் வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 26-2-2025
Vetha Langathilakam
பதிலளிநீக்குSathurudeen Allahpichchai
Admin
All-star contributor
Vetha Langathilakam அன்பான வணக்கம் வாழ்த்துக்கள்
26-2-2025
1d
Reply
Kanagasegaram Vimalasegaram
Sasidevi Riise
Congratulations 🥰👏👏👏
Stella Paulraj
Sandradevi Thirunavukkarasu
Congratulations
Baskaran Kathiravelu
Rasamalar Jeyam
Congratulations 👍👏