திங்கள், 29 ஏப்ரல், 2019

76. (657) நினைவெல்லாம் நீயே






நினைவெல்லாம் நீயே

உறவுகள் கைவிட்ட போதும்
துறவு மனமாகி மனதிலொரு வெறுமை
இறங்கிய போதும் தூணாக
உன்னைப் பற்றிடத் துணையாகிய சக்தியே!
எதையும் அலட்சியமாக எண்ணினுமுனை
மலையாகி நம்பித் தொடருவேன்.

நம்பிக்கைச் சுரங்கமே! தோண்டத் தோண்ட
மனபலம் புத்துணர்வுச் சாரலாக உயிர்ப்பு 
உருவாக்கும் உந்துசக்தியே உன்னதமே!
பால வயதிலிருந்து நினைவெல்லாம்
நீயானாய்! தொடர்ந்து தொடரும்
நித்திய சோதியே!

பெற்றோர் குருவானவர் அறிமுகமாக்கினார்.
அவர்களிற்கும் அதிபதியே! அன்பு கருணை
புனிதமென்பவற்றின் மறு உருவமென 
போற்றப் படும் தன்னம்பிக்கைத் தந்தமே!
தும்பிக்கையென நான் துவளாது துணை வரும்
தற்பரனே தாள் பணிகின்றேனுன்னை.

பேரர்களோடு இன்று உன் புகழ் பாடுகிறேன்
தாளம் தட்டித் தாமுமென்னுடன் மகிழ்திணைகிறார்.
என்றும் எல்லோருக்கும் துணையாகும் இறையே
இணையில்லாதவனே நினைவெல்லாம் நீயாகி
அனைவருக்கும் துணையிருப்பாய்.

7-7-2016


2 கருத்துகள்:

  1. ஒரத்தநாடு நெப்போலியன் :- அருமை.... வாழ்த்துகள்....
    22 hrs 7-7-2016
    Kavi Nila :- இறையின் நினைவே அருமைதான்... உம் வரிகளில் இன்னும் அருமை
    7-7-16
    Vetha Langathilakam :- ஒரத்தநாடு நெப்போலியன் & Kavi Nila மிக மகிழ்வும் நன்றியும் கருத்திடலிற்கு உறவுகளே.
    7-7-16

    Dharma Ktm super akka

    Vetha Langathilakam மிக மகிழ்வும் நன்றியும் கருத்திடலிற்கு Dharma.

    Maniyin Paakkal சிறப்பான ஆக்கம்

    Vetha Langathilakam மிக மகிழ்வும் நன்றியும் கருத்திடலிற்கு Mani

    பதிலளிநீக்கு
  2. முருகுவள்ளி அரசகுமார் :- அருமை
    2017
    Vetha Langathilakam :- மிக மகிழ்வும் நன்றியும் கருத்திடலிற்கு murugavalli Muruguvalli Arasakumar

    Jeyam Thangarajah :- அருமை
    2017
    Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சி dear J:T. மிக்க நன்றி கருத்திற்கு
    2017
    Subajini Sriranjan :- மிக அருமையான பா
    2017
    Sujatha Anton :- பெற்றோர் குருவானவர் அறிமுகமாக்கினார்.
    அவர்களிற்கும் அதிபதியே! அன்பு கருணை
    புனிதமென்பவற்றின் மறு உருவமென
    போற்றப் படும் தன்னம்பிக்கைத் தந்தமே!
    தும்பிக்கையென நான் துவளாது துணை வரும்
    தற்பரனே தாள் பணிகின்றேனுன்னை.
    அருமை. நிறைந்த கவிததுளி வரிகள்.
    2027
    Vetha Langathilakam :- மிக்க நன்றி Sujatha Anton

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு