செவ்வாய், 30 ஏப்ரல், 2019

79. (660) என் மகள் எனக்குத் தாயானாள்










என் மகள் எனக்குத் தாயானாள்


கருவறைச் சித்திரமெம் இரண்டாம் மாணிக்கம்
மனவறையிலெம்மை நித்தம் ஏந்தும் தாயானாள்.
இனம் புரிந்து துன்ப ஈரம் துவட்டி
கனம் முழுதும் காற்றில் எறிவாள்.

அவ்வளவு தன்னம்பிக்கை, அளவற்ற துணிவு
எவ்வளவும் சுயமாகத் தூணாகத் தாங்குதல்
அனுபவக் கோர்வைகளால் நிலைத்த உள்ளம்
தெளிந்து நெளிந்தோடும் நதியான தாயவள்.

மருத்துவ நிலைய வரவேற்பாளர், உயர்வால்
சிகிச்சைப் பகுதிப் பொறுப்பாளர், படிப்பால்
பெண்கள், பெரியவர்கள், குழந்தைகளுடன் செய்யும்
மனவியல் ஆலோசனைச் சிகிச்சையாளர் பணி..

பிரிவு ரேகை பதித்துக் கடல்கடந்தாள்.
பரிவுடை தொலைபேசித்   தாய்மைத் தத்துவம்
நித்தியம் பேசும் மனுநீதித் தாய்மையுடைய
மகத்துவமான எம் மாபெரும் சொத்தவள்.

பதினெட்டு வயதிலேயே மாற்றான் பிள்ளையைத்
தத்தெடுத்துப் படிப்பு பராமரிப்பை ஏந்தி
மானசீகத் தாயானவள், எமக்குப் பேரன்பீய
ஏது தடை! இயல்பு இறைவன் கொடையே!

முதுகு நீவி, கால்கள் பிடித்து
முறையான பயிற்சியைச் செய்து காட்டி
கணனியிலும் வாசித்து விளக்கம் தந்து
கருத்தாகக் கவனிக்கும் பாதுகாப்புத் தாயவள்.

உயிரணுக்கள் இணைந்து அணைக்கும் மென்மையாம்
உயிர்ப்புடைய அவளன்புப் போர்வை எம்
வயோதிப மனதிற்கு இதமுடை கதகதப்பு.
குளிர் சந்தனம் பூசிய உணர்வு.

ஊன்றுகோலானவள் வெற்றிக் கனி பறிக்கும்
எம்பும் மனத்தாள்! அழகால் அறிவால்
எம்மைக் கட்டியன்பு மலராலெம் கண்ணொற்றுபவள்.
ஆணிப்பொன் என் மகளெனக்குத் தாயானவள்!

 17-8-2016. 




3 கருத்துகள்:


  1. Lavi Langa :- Very sweet 💕
    2016

    Vetha Langathilakam :- Thank youda...மிகவும் எதிர்பார்த்து எழுதிய கவிதையடா

    Lavi Langa Thank you to you Amma, it is really beautiful poem. I am the daughter of you & Dad, so I cannot be anybody else 😂 💕

    Vetha Langathilakam:- God bless you two makal.



    Subajini Sriranjan :- இந்த அன்புக்கு நிகரானதொன்றில்லை
    வேறென்ன வேண்டும்
    மனம் கவர்ந்த வரிகள்

    Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் சுபா.
    2016

    பதிலளிநீக்கு
  2. Rathy Mohan :- அன்பு அன்பு அதொன்றே தெம்பு.. வரிகள் அன்புமயம்

    Vetha Langathilakam:- மிக நன்றியும் மகிழ்வும் Rathy Mohan

    Alvit Vasantharany Vincent:- அழகு வரிகளும் படமும்.

    Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் Alvit...

    Vetha Langathilakam

    Alvit Vasantharany Vincent:- படத்திலுள்ள கைவேலைப்பாடும் உங்களதோ?

    Vetha Langathilakam :- No from google.....

    Alvit Vasantharany Vincent:- ம்ம்ம்.
    1
    Delete or hide this
    Like
    · Reply · 2y
    Vetha Langathilakam
    Vetha Langathilakam
    Edit or delete this
    Image may contain: text
    1
    Like
    · Reply · 2y
    Maniyin Paakkal
    Maniyin Paakkal மன ஆழத்தில் ஊற்றெடுத்த வரிகள் சிறப்பு
    Delete or hide this
    Like
    · Reply · 2y
    Vetha Langathilakam
    Vetha Langathilakam கருத்திடலிங்கு மிக்க நன்றியும்
    மகிழ்வும் Mani.
    Edit or delete this
    Like
    · Reply · 2y
    Vetha Langathilakam
    Write a reply...

    Vetha Langathilakam
    Vetha Langathilakam Jaya Sudha :- அருமை ...
    Unlike · Reply · 21-8-2016
    Vetha Langathilakam :- கருத்திடலிங்கு மிக்க நன்றியும்
    மகிழ்வும் சகோதரி யெய சுதா.
    Like · Reply · 21-8-16
    Edit or delete this
    Like
    · Reply · 2y
    Vetha Langathilakam
    Vetha Langathilakam Shan Nalliah :- GREAT! GOD BLESS YOU ALL!
    Unlike · Reply · 1 · 2 1-8-16
    Vetha Langathilakam :- அன்புச் சகோதரரே! கருத்திடலிற்கு
    மிக அன்பும் நன்றியும் மகிழ்வுடன்.
    Like · Reply · Just now 21-8-16
    Edit or delete this
    Like
    · Reply · 2y
    Vetha Langathilakam
    Vetha Langathilakam சாயல் மஹா:- நயம்.
    Unlike · Reply · 21-8-16
    Vetha Langathilakam :- அன்புச் சகோதரரே! கருத்திடலிற்கு
    மிக அன்பும் நன்றியும் மகிழ்வுடன்.
    21-8-16

    Vetha Langathilakam :- சாயல் மஹா :- வாழ்த்துகள் சகோ.
    ·21-8-16

    Sujatha Anton :- அன்னையவள் வளர்ப்பு அளப்பரியது அதிலும் மகளின் பாய்ச்சல்
    இருமடங்கு. வாழ்க வளர்க11

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு