திங்கள், 29 ஏப்ரல், 2019

77 (658) காதலும் கசந்து போகும்.








காதலும் கசந்து போகும்.

ஏம்மா சரியாத் தானே ஓஞ்சேலை 
கழுவினேன்! நூல் துண்டிலே 
அழுக்கென்று நூல் புடிக்கிறியே தாயே.
பழுதில்லாமல் ஆக்கிய சாப்பாட்டில்
வழு சொல்லுறியேம்மா

புழு போல நானொரு பிறவி
புருசனும் சரியில்லாத வாழ்வு
புத்திரர்கள் இரண்டு பேரும் காவாலிகள்.
ஓன் வேலை தானே எனக்கு உசிர் கம்பு.
ஓன்னைய எதிர்த்துப் பேசவும் முடியலைம்மா.

இந்த மாதிரிப் போச்சுதுன்னா
இத்தினூண்டு பிரியமும் ஒம்மேல
இல்லாம என் காதலும் கசந்து போகுமேம்மா
என்னைப் புரிஞ்சுக்கோயேன் ஏம்மீது
கொஞ்சூண்டு கருணை காட்டேன்.

காந்து காந்தென்று காந்துறியே
கருணையே ஒனக்கு இல்லையா!
கதறி அழணும் போலிருக்கு.
கடவுளை நெனச்சு மவுனமாகுறேன்.
ஓம்மீதுள்ள காதலைக் 
கசந்து போகச் செய்யாதேம்மா

நீ கொஞ்சம் இறங்கி வரலைன்னா தாயே
நிர்கெதியான எனக்கு நிம்மதி தரும்
நிமலன் மீதுள்ள காதலும் கசந்து போகும் -

(ஒரு வேலைக்காரியின் புலம்பல்)

8-7-2016 



1 கருத்து:

  1. ஒரத்தநாடு நெப்போலியன் :- வாழ்த்துகள் கவிஞரே
    8-7-16
    Vetha Langathilakam :- வெகு மகிழ்ச்சி. நன்றி சகோதரா.
    -8-7-16
    குமுதினி ரமணன்:- அருமை
    2016
    Vetha Langathilakam:- குமுதினி ரமணன் வெகு மகிழ்ச்சி. நன்றி

    Poongavanam Ravendran :- அருமை வாழ்த்துகள்
    2016
    Vetha Langathilakam வெகு மகிழ்ச்சி. நன்றி sis


    Vetha Langathilakam காதலென்றால் ஆண் பெண் காதல் மட்டுமா?
    காதலென்றால் அன்பு தானே!!!!!!.......
    2016
    Subajini Sriranjan கிராமிய மணம் வீசுகிறது

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு