வெள்ளி, 14 ஜூன், 2019

107.. (686) மௌனத்தின் மொழி யாதெனில்....






 மௌனத்தின் மொழி யாதெனில்....

சயனமான முக்தி நிலையோ.!.
கவனமான இசையின் இரசனையோ.!.
நயனம் மூடிய காதலோ.!.
வயனம் (பறவை) போல பறத்தலோ!
மயான அமைதித் துன்பமோ!
தியானம் இவை மௌனமொழியே!

மௌனத்தின் மொழி அமைதி
மயக்கத்தில் நிலையை அசையிடுதலும்
இரவு வரும் மாலையும்
இரவு போகும் காலையும்
கரவற்ற காற்றின் மொழியும்
தரளமான (முத்து) மௌனமொழியே.

ஞானம் என்ற வழியால் 
ஞாயிறாய் விழி வழியால்
உயிரின் மொழியான உறவால்
இயல்பாய் சத்தமின்றி எழுவதால்
உணர்வின் சைகையும் இயற்கையின்
இன்பமான மொழியாம் மௌனமொழியே

இசைந்தால் இரசித்து மகிழ்!
கண்ணாடித் தொட்டியுள் மீனும்
காதல் பேரின்பமும் மௌனஇருளில்
கன்னத்தில் வெட்கமாவதும் பேசாதமொழியே.

24-7-2018



1 கருத்து:

  1. Subbu Raj:- இயற்கையின் இன்பமாய் வடிந்த மௌன
    மொழிக்கவிதை சிறப்பு கவியே!

    இனிய நல்வாழ்த்துக்கள்!
    2018
    Vetha Langathilakam :- நன்றி மௌனமொழி இரசனை


    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...