திங்கள், 24 ஜூன், 2019

115. (694) உன்முகம் அறியாமலேயே







உன்முகம்  அறியாமலேயே

உன் தமிழென்னை வியக்க வைத்தது.
என்ன ஒரு தமிழென்று அசந்தேன்.
உன் நட்பு தேவையென்று உணர்ந்தேன்.
என்னொடு இணைத்து மனம் மகிழ்ந்தேன்
என் போன்று தமிழில்  ஆழ்வோனென்று
இன்ப இலக்கிய நண்பனென்று மகிழ்ந்தேன்.

அத்தனையும் பொய்யாகி  கனவு ஆனதேன்!
உத்தமப் பிரபல கவிஞர் வரிகளையுன்
சொத்தென்று போட்டிகளிற்குச் சமர்ப்பித்தாய்  ஏன்!
இத்தனை பெரிய ஏமாற்றம்  ஏன்!
சித்தம் கவர்ந்த நட்புகள் வரிகளையன்றோ
எடுத்தாண்டுள்ளாய் உன் சிந்தனை என்று.

நட்புகளிற்குத் தெரிவித்தால் நீதிமன்றம் போவார்களோ!
எவ்வளவு இலகுவாக இணையத்தில் எடுத்தாய்!
இதற்கு இன்னொரு பெயர் உள்ளதறிவாயா!
எத்தனை பாடுபட்டுச் சொந்த வரிகளுருவாகிறது!
சுத்தமான கள்ளமற்றதுன்  தமிழென எண்ணினேன்
உள்ளிருந்த உன் முகம் அறியாமலேயே.

(ஏமாந்துவிட்டேனடா உன்முகம் அறியாமலேயே!)

 27-12-2017





1 கருத்து:

  1. Aruna Raguraman :- அப்பட்டமான உண்மை
    உள்ளம் வலிக்கிறது
    2017
    தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை :- அபாரம் சொந்தவரிகள் களவாடினால் என்னவென்று சொல்வது..
    2017
    Vetha Langathilakam:- Aruna Raguraman & தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை மிக்க நன்றி. ஆழ்ந்த அன்பு.
    இன்னும் நடக்கலாம் தேடலும் தொடரலாம்.
    பல நாள் களவு ஒருநாள் அகப்படலாம்
    2017
    Rani Lakshmi :- களவாடி புகழ் சேர்க்க எண்ணுவோர்க்கு சரியான சாடல்.. ஏமாந்த இதயத்தின் வலி... அருமையான வார்த்தைகளில்.. வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு