புதிதாய் ஒரு விதி செய்வோம்.
சுதந்திரக் காற்று சுகமாய் வீசிடவும்
சுந்தரக் குழந்தைகள் சுத்தமான விதிகளையும்
மந்திரமாக சிறு மழலையில் தொடங்கியும்
சிந்தனையில் ஏற்றிட சீரான வழி எடுப்போம்.
ஐந்தில் வளைவது ஐம்பதில் வளையாது.
விதியே இதுவென்று விடாது தொண்டு
மதியோடு புதிய முறை கொண்டு
புதிதாய் ஒரு விதி கண்டு
நிதியாக நல்ல நம்பிக்கை கொண்டு
நதி போல பாதையை செப்பனிடுவோம்.
கல்வியாம் அரிய கற்பகத்தை ஊன்றுவோம்.
செல்வமாய்க் கடமை செய்யெனப் பதிப்போம்.
நெல் வளமுயர நெஞ்சார முயலுவோம்.
மெல்லின மங்கையரை மதிக்கப் பழக்குவோம்.
முல்லை மலராய் மழலையைப் பேணுவோம்.
முத்தான தமிழை முடக்காது காப்போம்
உத்தமப் பெற்றோரை உறவுகளை மதிப்போம்.
மொத்தமாய்க் கையூட்டை முழுதாய் அழிப்போம்.
சொத்தாம் குளங் புதிதாய் ஒரு விதி செய்வோம்.
களின் சேறு வாருவோம்.
அத்துமீறி மரம் அரிவோரை அறிவுறுத்துவோம்.
இத்தனைக்கும் நல் விதி செய்வோம்.
13-7-2018
பதிலளிநீக்குParamaraj Muthaih :- எதையும் விதியென நினைத்து
நொந்து விடாமல்
முத்தானத் தமிழை
முடக்காதுக் காப்போம் !
அருமை !
வாழ்த்துக்கள் கவிதாயினி வேதா அவர்களே !
2018
Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்ச்சி உறவே.
2018
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்கு