வியாழன், 15 ஆகஸ்ட், 2019

166 (பெண்மை - 34 ) புது விடியல் காண் பெண்ணே!







புது விடியல் காண் பெண்ணே!

இதுவா உன் பிறப்பின் மேன்மை
பதுக்கிடவா அடுப்படியில் உன் நேரம்
பொதுவாக இன்னும் பல வெறுமை
புது நெம்புகோல் இல்லாதது சிறுமை
அதுவிருந்தால் உன்னைப் புரட்டிப் போடும்.
மெதுவாக மாற்றித் தன்னம்பிக்கை தரும்.
புதுக்கிடு உன்னை!  புறப்படு கண்ணே!
புது விடியல் காண் பெண்ணெ!

துணிந்து உன் கருத்தை மொழிந்திடு
துக்கராகம் இசைத்து  துஞ்சி  விழாதே
துடுப்பாயிரு  துன்பம்  துடைக்க  முன்னிரு.
துடிப்புடன் நூலைத் திறந்து பயணி
துதிகளில் மயங்காதே  துப்பறி காரணங்களை
துவைத்திடு அற்ப தூசியாம் பேதமைகளை
துன்னெறியாளரை  ஒதுக்கு துணையிரு நலிந்தோருக்கு
தும்பிக்கையான் துணையிருப்பான் புது விடியலுக்கு.

கண்ணியம் தொலையாது பெண்மையைப் போற்று
கண்ணானது  குடும்பம்  எண்ணத்தில் கொண்டிடு.
கண்மணிகளைப் புது வண்ணச் சமுதாயமாக்கு.
உண்மை தருமம் உன் செங்கோலாக்கு.
எண்ணத்தில் வலிமை திண்ணமாய் வேண்டும்.
வண்டிற் சக்கரமாய்க்  கணவனுடன் இணைந்தோடு.
வண்டமிழ்ப் புரவியுடன்  விண்ணைத் தொடு.
காண்பாய் பெண்ணே புது விடியல்.

11-3-2018








3 கருத்துகள்:

  1. அலி ரசூல் :- துணிந்து உன் கருத்தை மொழிந்திடு
    துக்கராகம் இசைத்து துஞ்சி விழாதே
    துடுப்பாயிரு துன்பம் துடைக்க முன்னிரு.
    துடிப்புடன் நூலைத் திறந்து பயணி
    துதிகளில் மயங்காதே துப்பறி காரணங்களை
    துவைத்திடு அற்ப தூசியாம். பேதமைகளை
    துன்னெறியாளரை ஒதுக்கு துணையிரு நலிந்தோருக்கு
    தும்பிக்கையான் துணையிருப்பான் புது விடியலுக்கு.
    அருமையான வரிகள் கவியே. வாழ்த்துக்கள்.
    14-3-2018

    Vetha Langathilakam
    makilchchy..
    No photo description available.
    2018

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு