வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

162 . (735 ) என் பேராசைகள்






 என் பேராசைகள்

தந்திரமாய் சிறு தகவுடை ஆசைகளையும்
மந்திரமாய்த் தலையாட்டி மகிழச் செய்யும்
சுதந்திரம் தந்து சுகம்  தரும்
சுந்தரனென் துணைவருடன் சுகமாயுலாவப் பேராசை.

இயற்கை அழகை  இயல்பாய் இரசித்து
மயற்கையாக நாடுகளை  மதுகை கொண்டு
அயர்ச்சியின்றி ஆராய்ந்து அறிந்து பார்த்திட
உயர்வுடைய சுற்றுலா அனுபவிக்க ஆசை.

வஞ்சம்  கையூட்டில்லா  இயக்குனர்கள் நாடாள
அஞ்சுதலின்றி மக்கள்  அமைதியாக வாழ்ந்து
கொஞ்சும் அன்பில் கொள்ளை அமைதியுணரும்
மஞ்சமான உலகு மலர பெருவிருப்பம்.

என்றுமென் தமிழ் எழிலாக இலகுவாக
இன்னாமை நீக்கி  இழிவற்ற இலக்கடைய
உன்னிப்புடை தாக்கங்களுடன் உலகவுலா கொண்டிட
நன்னெறியுடன் நல்லாட்சி நல்கு இறைவா!

28-5-2018




2 கருத்துகள்:

  1. சுப பாலா சுப பாலா : அழகான சொற்களால் விளக்கேற்றும் போது
    ஆண்டவனே நேரில் வந்து
    அனைத்தையும் தருவார்
    💞💞💞💞
    மிக அழகான வேண்டுதல்கள்
    உணர்வாளும் தமிழின்
    தூண்டுதல்கள்❤️
    மந்திரம்
    தந்திரம்
    சுதந்திரம்
    சுகம் தரும் கனிச் சொற்கள்
    கற்கண்டாய்👏
    வாழ்த்துக்கள்



    Vetha Langathilakam : பலருக்குப் பல கருத்துகள் விளங்காது.
    விளங்கிய அழகிய சாரல் இது.
    நெகிழ்த்தியது.
    வாழ்க நீடு !
    அன்பு வாழ்த்துகள்.
    .

    பதிலளிநீக்கு
  2. Govin Dhasami :- Super nice

    Vetha Langathilakam :- அன்பு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு