திங்கள், 7 அக்டோபர், 2019

192. ( 762 ) அக்னிக் குளியல்








அக்னி  குளியல்

முத்துக் குளிப்பதாய் முத்தெடுக்கும் திருமணத்தில்
அத்துமீறியதால் அன்பின்றி அக்கினிக் குளியலானது
அடக்கியாள   எண்ணுகிறாயா  கண்ணவன்  நீ!
அட!  கந்தோரிலும்  காமத்   தொல்லை.
முடக்குகிறாயா  அடி  உதையால்!
இடக்கு(தடை)  செய்யாமல்  சமைக்கவும் வேண்டுமா!

வடக்கு  வாசல்  நீதிமன்றம்  செல்வதா!
விவாக   முறிவேன் ! விவேகம் எங்கொழிந்தது
விவேகமுடைய  அக்னி   குளியலை நடத்து!
பெண்ணுக்கும்   ஆணுக்கும்   அனலில்  நடையே!
வாழ்வேயொரு    அக்னி   குளியலே
விட்டுக் கொடுத்து  மன்னித்து வாழ்!

7.6.2017




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...