வெள்ளி, 18 அக்டோபர், 2019

201. ( 770 ) கருணைக் கடல்







கருணைக் கடல்

அன்பு, எளிமை, இறைபக்தி, ஆதரவு
வன்மையற்ற  சகிப்புத்  தன்மை  சகோதரத்துவம்
இன்பிக்கும் கருணையென்னும் கருவிகளைத்  தான்
அன்னை தெரேசா கையில் எடுத்தார்.
ஆன்மிக வழியில் வாழ்வைத் திருப்பினார்.

இன்னல் விலக்கியுலகில் கருணைக்  கடலானார்.
உன்னத   சேவையாக ஏழைகளை   தொழுநோயாளரையும் 
சின்ன வேறுபாடின்றி ஆதரித்து அரவணைத்தார்.
அன்னத்தையும்   இரந்து   சேகரித்துப்  பட்டினியாளருக்கீந்தார்.
சின்னமாம்  நோபல் பரிசையும் வென்றார்.

27-1-2018




1 கருத்து:


  1. Sukhumar ThiagarajanGroup admin அருமை வரிகள்
    அலங்கரிக்குது
    அன்னை புகழையும்
    அன்னைநினைவுகூறும்
    அன்பு பத்துக்குப் பத்தையுமே !
    வாழ்த்துது சாரல்
    கவி இலங்காதிலகம் அவர்களையே !
    பாராட்டுகள் கவியே !
    மருத்துவகவிஞர்
    பெ.தி.சுகுமார்.
    29-1-2018

    Vetha Langathilakam
    photo thanks...

    Paramaraj MuthaihGroup admin இச்சொல்லிருக்க வன்சொல் பேசாமல் ஆன்மீக வழியில் தன் பயணத்தைத் தொடர்ந்து நோபல் பரிசு வென்றவர் !
    உண்மையான நிகழ்வுகள் !
    சிறப்பு !
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கவிதாயினி அவர்களே !
    30-1-2018

    Vetha Langathilakam
    Nanry...நன்றி

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு