ஞாயிறு, 3 மார்ச், 2019

40. (626) ஒற்றுமை -- சங்கமம்.











ஒற்றுமை

ஏற்றிடும்    ஈடுபாடு    கொள்கை
வீற்றிருக்கும்  நாடு,  வீடே
வேற்றுமையில்  ஒற்றுமை காணும்
ஆற்றல்   கொண்ட   இடம்.
நாற்றமுடை  பேதமை   விலக்கி
நூற்ற   நீதிகள்  மனதிலேற்றி
காற்றும்   புகா  ஒற்றுமையேந்தி
மாற்றமின்றி   ஒன்றாய்  வாழ்வோம்.

4-7-2018


வேறு

சங்கமம்.

சங்கமம் அன்பினால் புது உறவு
சங்கமிக்கும் எழுத்துகள் புது வசனம்.
சங்கம அங்கங்களால் புதிய கரு
சங்கமம், கூடுகை, கலத்தல் இரு

சங்கீத சங்கமம் இசை விழா
சங்கமக் கலைகள் பெரு விழா.
பொங்கும் கடல்களின் சங்கமம் நீரிணை
சங்கமிக்கும் கல்விக்கு ஒரு பாடசாலை

பக்தியின் சங்கமம்  அமைதிப் பாதை
பகட்டின் சங்கமம் குடும்பத்தின் கேடு.
பகையின் சங்கமம் கலகத்தின் பிறப்பு
பணத்தின் சங்கமம் குணத்தை மாற்றுதல்.

ஆணும் பெண்ணும் சங்கம் திருமணத்தில்.
காணும் பொங்கலும் ஒரு சங்கமம்.
வேணும் நல்ல சங்கமம் உறவினிலே
பேணுங்கள் உறவை அன்பின் சங்கமத்தில்

2016




இரண்டாம் வலையில் - 16. சான்றிதழ்கள் – கவிதைகள் (30.ஒற்றுமையே பலம்)  தலைப்பில் கவிதை உண்டு

இதன் இணைப்பு

https://kovaikkothai.wordpress.com/2018/01/10/14-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92/




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு