வெள்ளி, 8 மார்ச், 2019

43. மகளிர் தினத் தீபமேந்து! (பாமாலிகை பெண்மை 26.)




பாமாலிகை பெண்மை -  தலைப்பில் எனது  முதலாவது வலை
வேதாவின் வலையில் 25 அங்கங்கள் இட்டுள்ளேன்.
 அதன் தொடர்பு இங்கு நீளுகிறது. அதன் இணைப்பு இதோ!.....

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/






மகளிர் தினத் தீபமேந்து!

யாசிக்காது பெண்ணேயுன் விளக்கையேந்து!
வாசிப்பு ஆடையை அணி!
சுவாசிப்பு மொழியாக ஆக்கு!

நேசிப்பைக் கையில் எடு!

ஆணென்றும் பெண்ணென்றும் அல்ல
ஆள் பார்த்தே உறவாடும்
ஆகக்கூடிய கொடுமை உலகு..
ஊகிப்பாயா! தோழமையும் விரோதச்சாயல்!

பெண்ணே பெண்ணை ஒதுக்கும்
பெண்மைக்கொரு நாள்! நன்று!
உண்மையாய் உன்னைக் காதலி!
வெண்மையாய் இரு! வாழ்க!

மகரந்தக் கனவுப் பெண்ணுக்கும்
மாறுபட்ட மனமேன் மாற்றிவிடு!
கூறுபடாது குறியாய் நில்!
கூர்ப்புடனிரு! நட்பைச் சங்கிலியிடாதே!

மயிலிறகுத் தோழியாய் நலம்பாடு!
மனக்கதவுத் திறவுகோல் ஆகு!
மனதில் தேனூட்டு... தீயல்ல....!
மகிழும் மகளிர் தினவாழ்த்துகள்



 8-3-2019





பெண்மை வாழ்கவென்று


அன்பு அறிவு திமிர் பெண்மை.
அருள் அழகு அடங்காத்தனம் பெண்மை
அகங்காரம், ஆணவம் அகல்விளக்கு பெண்மை.
அடக்கியாளுதல், அடங்கிப்போதல் பெண்மை.
அழிப்பதும் ஆக்குவதும் ஆளுவதும் பெண்மை.
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!
பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!


march..7. 2017


        


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு