ஞாயிறு, 17 மார்ச், 2019

51 (634) வளர்ச்சி வரம். - மாற்றங்கள்






வளர்ச்சி வரம்.


வளர்ச்சி வரம்!


வரமெனும் ஒளியை  வளர்ச்சியை
விரலாலும் கண்கள் சாத்தினும்
பரமானாலும் அழிக்க முடியாது.
தரவின் விதிப்படியே நடக்கும்

மனிதப்பிறவியும் பறவைகள் பறப்பதுவாக
புனித மழலை  எழுவதுவாக
இனிய மாற்றங்கள் கசப்புடனும்
சனியொட்டுவதாக உலகில் நடக்கும்.

பலமான புறக்கணிப்பும் அலட்சியமும்
வலமிடமென வதைத்தாலும் உருகிடும்
வெல்லும் தன்மையன.
தளர்த்த யாரால் முடியும்!


 17-3-2019



மாற்றங்கள்

மாற்றங்கள் மாறி மாறி வரும் 
சீற்றங்களாயும்  சிரிப்பாகவும்
ஆற்றலாயும் அமைதியாயும்
ஏற்றங்களாயும் இறக்கங்களாயுமே

குழந்தை , பிள்ளை , குமரர்
கணவன், அப்பா, தாத்தாவாக
கடமை, சவால், பயமாக
காதலாக, வானவில்லாக வாழ்வு.

பயணத்தால் மாற்றம் இனிமையாக
பயங்கரத் தொற்று கொரோனாவாகிப் 
பாழாக்கும் மாற்றம் கொடுமை
பாதிப்பின்  குறையையெங்கு  கூறுவது!

மாற்றங்கள் சிலவற்றை மூளையால்
தேற்றலாம், தன்னை மாற்றுதலாலும்.
மாற்றங்களாக வாழ்வில் உன்னதம்.
ஏற்றமான நாற்பருவ காலங்கள்

சிந்தனைக்  கூட்டுறவு சமூகத்தில்
சிறந்த மாற்றம் உருவாக்கும்.
நிறைந்த  அன்புப் பரிமாற்றம்
தடுமாற்றம் ஏமாற்றம் தவிர்க்கும்.

எதிர்த்தலும் ஏற்றலும் தேடலாலும்
புதியனவாகக்,  கற்பலகையின் படிப்பு
கணனியிலாக,  கண்களைப் பழுதாக்கும்
தொழில் நுட்பமாற்றம். இது மாறாதது.

அறிவாயுதத்தால்  உலகை மாற்றலாம்
ஆயுளை  புன்னகைத்து நேசிப்பருடன்
ஆனந்தியுங்கள்  மாற்றம் உருவாகும்.
இயற்கை,யான,  தன்னிச்சையான நிகழ்வே வாழ்வு.

எதிர்த்தல் துன்பமே இயல்பாக விடுங்கள்.
உங்களை வெளிப்படுத்துங்கள் மாற்றம் தானாயுருவாகும்.
உலகிற்கேற்ற வகையான கருத்துப்
பலம் உன்னை உயர்த்தும்

 12-2-2021




1 கருத்து:

  1. Comments
    Vetha Langathilakam
    வளர்ச்சி வரம்!
    தளர்த்த யாரால் முடியும்!
    2019
    Rathy Mohan
    ஆம் வளர்ச்சி ஒரு வரமே
    2019
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி ரதி
    2019
    Vetha Langathilakam
    Ashok MA Mphil :- இனிய மாற்றமே..!
    வணங்கி
    மகிழ்கிறேன்..!
    2019
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி Ashok MA Mphil


    Vetha Langathilakam
    Subi Narendran :- உண்மையிலே வளர்ச்சி வரம்தான். வாழ்த்துக்கள்
    18-3-2019
    Vetha Langathilakam:- அன்புடன் மகிழ்ச்சி Subi Narendran
    2019
    Vetha Langathilakam
    Shanthy Bala உண்மையில் வளர்ச்சி வரம் தான்.
    தளர்த்த யாராலும் முடியாது. . .
    பலமான புறக்கணிப்பும் … See More
    2019
    Sujatha Anton
    வரமெனும் ஒளியை வளர்ச்சியை
    விரலாலும் கண்கள் சாத்தினும்
    பரமானாலும் அழிக்க முடியாது.
    தரவின் விதிப்படியே நடக்கும்
    நிறைந்த சிந்தனைக்குரிய கருத்து. தமிழ் வளர்க.!!!!

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு