ஞாயிறு, 3 மார்ச், 2019

41 (627) உத்தம தேசம் அழிக்காதீர்!











உத்தம தேசம் அழிக்காதீர்!


பொத்தி வைத்த வக்கிரங்கள் அனைத்தும்
சித்தியின்றிக்  குருரமாக வெளியேறும்  வீடாகி
அத்தியாயங்களாக  அதை விதைக்கும்  உறவுகளின்
உத்தம அன்பின் ஆணிவேரை  அழிக்குமாணவம்

அத்தியாவசியமற்ற அத்திரங்கள் வீசி ஆனந்திக்கிறது.
தித்திப்பு மொழிகளும் மறந்த சொத்தாகிறது.
இத்துணை அநாகரீகம் குடும்ப  இதயமானால் 
உத்தம தேசத்தையே அழிக்கும்   சொத்தாகாதோ!

நாகரிக உலகம் கண்டும் இன்னும்
நாற்றமெடுத்த வாழ்வை மாற்றிட முயன்றிடலாம்!
நாட்டமுடன் கடலின் சங்கீதம் கேள்!
வாட்டமற்ற மகிழ்வு நாளும் விழையும்.

வினை மனம் உனது. அதனால்
விழுபவர் நிலை பரிதாபம்! சூழ்ச்சி
விலை புரியாது வலையில் சிக்கி 
விடுதலை மனம் இழப்பது பரிதாபம்.

30-10-2017





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...