வெள்ளி, 22 மார்ச், 2019

59. (641) சுயஆளுமைச் சிதறலோ!..








சுயஆளுமைச் சிதறலோ!...

தேன் மொழிகள் தேய
வீண் மொழிகள் பாய
ஏன் இத்தனை வன்மம்!
ஏன் நெஞ்சில் கனமோ!

அடிப்பார்கள் தன்னை என்று
கடிக்கிறது பாம்பு என்பார்.
இடிக்கிறதே இந்தச் செயல்கள்
அடித்தாரோ எவரோ! யாரோ!

கேள்விகள் பதிலைக் காணாது
கேள்வியைக் கேள்வியால் திருப்புவது
வாள் வீச்சென்றோ! - மகா
வேள்வி என்றோ ஆகுமோ!

கிட்டினாலும் கொட்டிக் கொட்டிஇ
பட்டு மொழியும் பட்டு
கெட்ட கொடுமைத் தோற்றம்
பட்ட சூட்டுக் களைப்போ!

சுட்டுச் சுட்டு மனிதர்
கிட்ட அண்டக் கூடாத
காட்டுக் குணம் ஏனோ!
எட்டியதோ சுயஆளுமைச் சிதறல்!


2-29-2012




3 கருத்துகள்:

  1. Arul Mozhi :- அருமை பாம்புடன் ஒப்புமை அழகோ அழகு.
    202
    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan --"..தேன் மொழிகள் தேய
    வீண் மொழிகள் பாய
    ஏன் இத்தனை வன்மம்!.." கருத்தாளம் மிக்க அருமையான கவிதை.
    2012

    பதிலளிநீக்கு
  2. அருமை
    தங்களின் வலை புதிய பொலிவுடன் காட்சிதருகிறது
    வாழ்த்துகள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. Subajini Sriranjan :- மிக அருமையான படைப்பு
    சுய ஆளுமைகள் சிதறி
    வன்மங்கள் தொடர்கிறது
    மனிதம் தொலைகிறது
    2016
    Dharma Ktm:- arumai akka
    2016
    Ramesh Manivasagam :- நாட்டில் வன்முறைகள் பெருகிவிட்டது மிகவும் கவலை தருகிறது - நல்ல பதிவம்மா .

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு