அவ கீர்த்தியுலகு
நரகக் கோட்டைகளின் நாற்றம்
அரக்கர் அரற்றல்களின் விநோதங்கள்
அரங்கம் அரிவாள் இடுப்புப்பட்டி
அரட்டு மிரட்டல் அரசாங்கம்
அரசியல் மர்மப் புகைகள்
பரவலாகக் கொலைத்தபடி வாழ்வு.
உணர்தலற்ற வன்மைப் புணர்வு
வணர்தலற்ற (வளைதலற்ற) ஊமைப் படபடப்பு
திணறும் துயரக் கதறல்கள்
பிணக்குகள் இருட்டு இரகசியங்கள்
தணலாக நான்கு சுவரிடை
தகதகத்து முனகிப் புகைகிறது.
அரக்கரின் பூவுலகு இது
அண்ணன் தம்பி துணையானவள்
அங்ஙனம் கர்ப்பத்தடை மாத்திரைகளோடின்று
அரவுரியான காமம் இளமையோடழியும்
அஃதுணராது இருபாலாரும் இயக்கும்
அவலட்சணம் அல்லோலகல்லோல உலகு.
Vetha Langathilakam
பதிலளிநீக்குநல்ல ஆக்கம் என்று தோன்றுமிடத்து
லைக்கை விட்டு சிறு கருத்தாகக் கொடுங்கள்.
மிக்க நன்றி
2019
Rathy Mohan
யதார்த்தத்தை தந்த வரிகள்... சிறப்பு..
2019
Vetha Langathilakam
மகிழ்ச்சி நிறைந்த அன்பு ரதி..
2019
Jasmin Kennedy
காலத்திற்கேற்ப வரிகள்
2019
Vetha Langathilakam
மகிழ்ச்சி நிறைந்த அன்பு யஸ்மின்.
2019
Subajini Sriranjan
அருமையான படைப்பு
கொலையும் பாலியல் கொடுமைகளும் வன்முறையுமே நிறைந்திருக்கிறது
காலத்திற்கேற்ப கவிதை
2019
Vetha Langathilakam
அன்புடன் மிக மகிழ்வு சுபா.
2019
Alvit Vasantharany Vincent
இருபாலாரையும் சாடியிருக்கிறீர்கள் சகோதரி.
காதல் வசப்படுவது இயற்கை. அதை பலவீனமாக்கி நம்பிக்கைத் துரோகத்துடன் சீரழிப்பதை மன்னிக்க முடியாது.
தேவையான பதிவு சகோதரி.
2019
Vetha Langathilakam
அன்புடன் நன்றி சகோதரி. முதலில் ஆண்களைச் சாடித்தான் எழுதினேன்.
ஏன் பெண்கள் தனியிடம் போகிறார்கள் என்று
ஒரு ஆசிரியருடன் பேசும் பொது வடிவாக என்னுடன் பேசினார் .… See More
2019
Shanthy Bala
தற்போதைய காலத்திற்கேற்ற அருமையான கவிதை. . . .
வாழ்த்துக்கள் சகோதரி.
2019
Vetha Langathilakam
அன்புடன் மிக மகிழ்வு shanthy
2019
Sujatha Anton
பெண்ணுரிமை எந்தளவிற்கு விளையாட்டு பொம்மைகளாக விலை போகின்றது. சமுதாயம்......
2019