வியாழன், 25 ஜூலை, 2019

146 ( என் மன முத்துகள் -8-9-10 )





8
என் மன முத்துகள் 

26-11-2017

மனிதனுக்கு மனிதன்நேரம் செலவிடவோ
நட்பிற்கு நட்பாக  நேரம் செலவிடவோ 
மனிதனுக்கு நேரமே இல்லை.
சொந்த புத்தியில் நடப்பதிலும் குழுநிலைச்
சிந்தனைகள் மேலோங்கி  உறவுகளை நொறுக்குகிறது.


9


எனக்கு முடிந்ததை நான் செய்யலாம்

என் திறமையை நான் காட்டலாம்
என்பதைவிடஇ அவன் செய்கிறான் 
அது போலவே நானும் செய்ய வேண்டும்
என்ற மனநிலை ஆபத்தானது. தனது 
வாரிசு வரை அசிங்கமாக இழுத்துச் செல்லப்படுகிறது.

14 – 10 - 2010

10

பெற்றோர்பாச இரசமற்ற கண்ணாடிகளாகச் சில பெற்றோர்கள்.
சிறகொடிந்த பறவைகளாகத் தேடுவாரற்ற சில பிள்ளைகள். பெற்றோரை விட சிறந்த ஆதரவு யார் கொடுப்பார்கள்.
பணப்  பவிசிலும் உலகத்திற்கு மினுக்கம் காட்டவும் 
கவனத்தை கூட்டிப் பெருக்குவதில் பெற்றவர் சிந்தனை.
சொந்த பிள்ளைகள் வேதனையில் மூழ்க பெற்றவர்
பந்தம் அறுத்து வாழ்தலும் ஒரு வாழ்வா!

2018







3 கருத்துகள்:

  1. Sujatha Anton
    ஓருவர் செய்கிறார் என பார்த்துச் செய்வது நமக்குள்
    இருக்கும் திறமைகளை அழிப்பதாகும்.ஒருவர் திறமையை
    வெளிப்படுத்துவது அவரது விடாமுயற்சில் தங்கியுள்ளது.
    2010
    Sujatha Anton
    oh,,,,, thanks lady
    ·2010

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு