புதன், 31 ஜூலை, 2019

152.. (726) சிறகடிக்க ஆசை








சிறகடிக்க ஆசை

தண்ணொளி நிலவாய், தரணியில் காற்றாய்,
மண்ணிலே கதிராய் மகிழ்ந்து சிறகடிக்கலாம்.
கண்ணிலே தோல்வி காணா இவைகளாய்
மண்ணில் புதையாத  மகாஞானச் சிறகடிக்கலாம். 
விண்ணெங்கும் அளந்து வித்தாரக் தமிழாடலாம்.

அரியவறிவுக் கர்ப்பமுடைய அர்த்த பதங்களில்
விரியும் கவிதை வீரிய  இறகுடன்
உரிமையாய்ச் சட்டமிடாத உயர் சுதந்திர
உரித்துடை வானில் உயரவேற ஆசை.
கரிசனையாய் என்றும் கருணையாய்ப் பறக்கலாம்.

செயற்கை மலிந்து சீரற்ற இடமின்றி
இயற்கை நிறைந்த இகலோகம் தரிசித்து
மயற்கை  இன்றி  மகிழ ஆசை.
முயற்சி ஆசைக்கு மும்மாரி பொழியும்.
தயக்கமின்றி வெற்றித் தரவு எட்டலாம்.

பால வயதிற்கு மறுபடி செல்ல
பார்த்து வளர்ந்த பாதமிட்ட வீட்டை
நேர்த்தியான உறவுகளை நேரிலெம் நாட்டில்
ஈர்த்திடும் பூங்கா கானக உலாவென
தீர்த்திட  வேண்டும் சிறகடிக்கும் ஆசைகளை.

13-4-2018






2 கருத்துகள்:

  1. Indran Manges :- தண்ணொளி நிலவாய்
    தரணியில் காற்றாய்
    எனப்பலவாறான ஆசைகளை
    அவிழ்த்திட்ட தங்கள் கவி அழகு உறவே.
    வாழ்த்துக்கள்!
    2018
    Vetha Langathilakam
    நல்ல வார்த்தைகள் போட்டு எழுதினாலும் வித்தியாசமாய் இருக்கு என்று எழுதி தள்ளி விடுவார்கள்.
    அல்லது சில கருத்துகள் புரியாமலும் போகலாம்.
    மரபுக் கவிதையையே தள்ளி விடுவார்கள்.
    2018


    Subi Narendran
    அற்புதமான சிறகடிக்கும் ஆசைகள் அருமை. நேர் மறையான ஆசைகள். வாழ்த்துக்கள்.
    2018
    Rathy Mohan
    வரிகள் செழுமை
    2018
    Vetha Langathilakam
    Subi Narendran and Rathy Mohan
    No photo description available.
    2018
    Vetha Langathilakam
    Maniyin PaakkalManiyin aபாவலர்கள் தெரு:- . செயற்கை மலிந்து சீரற்ற இடமின்றி
    இயற்கை நிறைந்த இகலோகம் தரிசித்து
    மயற்கை இன்றி மகிழ ஆசை.… See more
    2019
    Sujatha Anton
    செயற்கை மலிந்து சீரற்ற இடமின்றி
    இயற்கை நிறைந்த இகலோகம் தரிசித்து
    மயற்கை இன்றி மகிழ ஆசை.… See more
    2019
    Vetha Langathilakam
    photo thanks

    பதிலளிநீக்கு

  2. Janaki Sreenivasulu
    அருமை! வாழ்த்துகள் சகோதரி
    ReplyShare13m
    Vetha Langathilakam
    Author
    Janaki Sreenivasulu மகிழ்ச்சி மிக்க அன்பு சகோதரி 16-4-2022

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு