திங்கள், 1 ஜூலை, 2019

119. ( 31 பெண்மை ) பெண்கள் உயரக் கூடாதா!






பெண்கள்  உயரக்  கூடாதா!

பெண்களை உயர விடார்
கண்கள் நீங்களே  என்பார்
பண்களில் மட்டுமே! மட்டுமே!
திண்ணம் இதுவே  இதுவே  

அடங்கியதா பொறாமை அடங்கியதா
மடங்கியதா கேள்விகள் மடங்கியதா!
அடங்காத்தனமா! அணி சேர்ப்பா!
தடங்கலிட்டாலும் கொடியானது படரும்

உறுதியான உயர் பொற்காலங்கள் 
இறுமாப்பாய் செழித்த மொழி
பொறுமை காத்த மொழி
அறுகம்புல்லான மொழி அழிப்பதார்!

இடக்குமுடக்காய்  இழுபறி செய்தால்
படங்கு விரித்து பாரையழைத்தால்
தொடங்கு போர் என்றால்
உடன்படுவார் யார் எவர்!

வம்புக்கு வலிந்து இழுப்பார்
கம்பர் அவராம் என்பார்
அம்பு தொடுப்பார் ஏன்
ஒளவை நான்  என்றேனா!

வறுமை மனம் குமுறும்
வெறுமை மனம் எகிறும்
அறுவை சிகிச்சையும் செய்யும்
சிறுமையர் சிறுமையே செய்வார்.

29-6-2016



வேறு.

பெண்ணே!...

சுதந்திரப் பாதையில் உன் நடை
நந்தவனத்தில் தளிர்களோடு நடக்கட்டும்.
சுந்தரப் பெண்ணே தளிர்களுக்கு உதாரணமாகு!
தந்திர நீதிமொழிகள் நன்னெறி பழக்கு.

வல்லமையாய் முதியோரைக் காத்திடு!
இல்லாமை வறுமைக்கு என்றும் உதவு!
இளையோரை மொழியோடு நல்வழிப் படுத்து!
இழுக்கற்று வாழ்ந்து உயர்வாய்ச் சிறந்திடு!

மொழி உணர்வோடு கலந்தது மட்டுமன்றி
மொழி பேசுவதோடின்று எழுதுவதாக வந்துள்ளது.
மொழி இலக்கண வேலியுள் பயிராகிறது.
மொழிவழி முன்னோர்களை யடியொற்றித் தொடர்

13-7-2020






1 கருத்து:

  1. 13You, பூக்காரி கவிதைகள், Premkumar Prajana and 10 others
    Comments

    Poongavanam Ravendran :- மிக அருமை மா
    2018

    Sj Siva:- Unmai thaan akka.
    2018

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு