புதன், 3 ஜூலை, 2019

122 . (700) அன்பினால்……






அன்பினால்……

அன்பினால் ஆகாதது உலகில் எது!
துன்பியல் சொல்லின் அருத்தம் மறைகிறது.
அன்பின் பார்வையே ஆயிரம் பதில் தரும்.
அன்பின்மையால் ஆயிரம் நோய்கள் உருவாகும்.
அன்பில்லாமை கல்லு முள்ளில் நடத்தலாகும்.

மூச்சுக் காற்றை இயந்திரத்தின் மூலம்
உள்வாங்கும் உடல் அன்பான குரல்
அன்பான தொடுகையால் துளிர் விடுகிறது.
அன்பை உணராதவன் வதனமும் கடுமையான
தோற்றம் கொண்டதாய் அவலமாகத் தெரிகிறது.

கருவிலிருக்கும் குழந்தை கூட அதிர்வு
தாக்கங்களால் இயல்பு நிலை மாறுகிறது.
இன்னிசை, அன்பினால் இனிய தாக்கம்
இனிதாகப் பெறுவது இயற்கை விந்தை.
இன்பமே எந்நாளும் அன்பு செய்தால்.

மெல்லிய உணர்வுக் கயிறு மனதில்
அல்லியாய் தினம் பூத்து ஆனந்திக்கும்.
அன்பினால் கண்ணீரும் உருளும் கன்னத்தில்.
புன்னகை உதட்டிலும் இதயத்திலும் வரும்.
அன்பினால் அனைத்து நோய்களும் தீரும்

உண்மை அன்பினால் யானை பலமும்
பண்பு கொடை காதலும் கிடைக்கும்.
அன்பிற்காக உயிரீயும் மனவுணர்வு வரும்
அன்பு அதிசய இன்ப ஊற்று.
அன்பினால் விளைவது அன்பு மட்டுமே.

7-7-2016





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...