புதன், 3 ஜூலை, 2019

124. (702) முத்துச் சிரிப்பு








முத்துச் சிரிப்பு

முத்துச் சிரிப்பே முல்லை விரிப்பே
முத்தாரமே எம் தங்க முத்திரையே
முத்தம் ஒன்று தாவேன் முழுநிலவே
சத்து எனக்குச் சந்தோசமாய் கூடுமடி.

உன்னைக் கண்டதும் உலகு மறக்க
கன்னம் கிள்ளிட எண்ணம் வருகுதடி
கவனம் இலயிப்பாக விளையாட வருவாயா!
கதை சொல்லவா! எது பிடிக்கும்!

வானத்து நட்சத்திரமே வந்துதித்தாய் எம்மிடமே
வாலைச் சுருட்டி ஓடுதடி கவலைகள்.
வாழ்க்கை இன்பத்தில் மழலை மரகதமே
வாடாதுன் மகிழ்வு வளமாய் உயரட்டும்.

மனிதன் மட்டும் மகிழ்ந்து சிரிக்கும்
மகத்தான மாற்றம் உடலில் நிகழும்.
மருந்து செய்யாததையுன் முத்துச் சிரிப்பு
மறக்காது செய்யும் மகத்தான மந்திரம்.

22-7-2016








1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...