வியாழன், 4 ஜூலை, 2019

125 . (பெண்மை - 32) முதிர் கன்னி.








முதிர் கன்னி.

(காவுதல் - விரும்புதல்)

உதிர்க்கும் புன்னகை அன்பான பார்வையும்
அதிர்வற்ற அழகு பணம் பதவியும்
கதிர் வீச்சான கருத்து செயற்பாடுடை
முதிர் கன்னியவள் பெருமையுடை பெண்.

பரிதாபத்திற்கு உரியவள் அல்ல அன்னாள்
பார் போற்றும் உத்தமப் பெண்ணாள்.
அரிதாரம் பூசாத இயற்கை அழகி
வெற்றித் திருமகள் முதிர் கன்னி.

காத்திருக்கிறாள் ஒரு கனிந்த வரனுக்கு.
காலம் கைகூடும் ஒரு ராமனுக்கு.
காலத்தைக் காடாக்காது கல்வி கடமைக்கு 
காவுதலாக்கினால் களிப்போடு வாழ்வு வரும்!

(முதிர் கன்னியென்றால் அழுகை ஒப்பாரி பெருமூச்சு மட்டும் தானா ! மாறுபட்ட சிந்தனையில்)

9-6-2016


வேறு:-  

ஆனந்த மழை

பார்வைக்கு அவள் சௌபாக்கியவதி காரணம்
பாக்கியமான பதவி பற்றாக்குறை நேரம்
காத்திருக்கிறாள் ஒரு கனிந்த வரனுக்கு
காலம்  கைகூடுமொரு ராமனுக்கு
காலம் வீணாக்காது கல்வி கடமைக்கு
கருமமாய்ச் செலவழித்தால் திருமணமும் கைகூடும்

2016







1 கருத்து:


  1. கரந்தை ஜெயக்குமார்30 டிசம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 4:20
    நியாயமில்லைதான்

    Vetha:- Mikka nanry bro

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு