திங்கள், 8 ஜூலை, 2019

130. (707) அரும்புகள். .







அரும்புகள்.

அரும்பும் முதல் தளிர்
குருத்து, கொழுந்து, மொட்டு.
விரும்பும் பூவும் இலையும்
விளையும் சீவன்களும் ஆகலாம்.

இரும்பு மனமும் நெகிழ்ந்திடும்
துளிர்க்கும் அரும்பு கண்டால்.
அரும்புகள் அசையும் காட்சி 
கரும்பென மனதில் இனிக்கும்.

அரும்பும் புதுமைக் கருத்துகள்
திரும்பும் சிறந்த ஆக்கமாய்.
அரும்புகள் மனதும் உடலும்
நொருங்காது பாதுகாத்தல் கடமை.
      (குழந்தைகள்)
அரும்புகள் பசுந்து முகமும்
அருகாமை மென்மை, மழலையும்
தருமின்பம் கோடி பெறும்.
திருவென்பது மழலை இன்பமே.

பேசும் பாச தெய்வம்
தேசுடன் பெற்றோரை இணைக்கும்
ஆசுவம், நல் ஆசிரியம், 
தூசு அகற்றுமில்ல அச்சாணி.

அரும்புக் கூட்டம் ஒரு
அழகு தாரகைப் பட்டாளம்.
விரும்பும் கழந்தைக் கும்மாளம்.
கரும்புகள், அரும்புகள் விரும்புங்கள்.

3-11-2015


அமீரக இதழ்- தமிழ்த் தேர் 

கார்த்திகை 2015 இதழில்   அரும்புகள்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...